பேரீச்சை பழத்தின் போற்றப்படும் நன்மைகள் அறியலாம் வாருங்கள்!
உலர்ந்த பழமாகிய பேரிச்சம்பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியுள்ளது, பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் இந்த பழத்தில் உடலுக்கு தேவையான ஆற்றலை அள்ளி தரக்கூடிய சக்தி உள்ளது. இது குறித்து அறியலாம் வாருங்கள்.
பேரீச்சையின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்
பேரிச்சம்பழத்தில் இயற்கை சர்க்கரையான குளுகோஸ், சுக்ரோஸ் மற்றும் புரூக்டோஸ் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த பழத்தை பாலுடன் உட்கொண்டு வரும் போது உடலில் உள்ள சோம்பேறித்தனம் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தும் காணப்படும். மேலும் ஆண்கள் இந்தப் பழத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் இது ஆண்மை தன்மை அதிகரிக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பழத்தில் உள்ள கனிமச்சத்துக்கள் காரணமாக ஆண்களை அதிகம் தாக்கக் கூடிய கொலஸ்ட்ரோல் பிரச்சினை வராது எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் பி1 பி2 பி3 பி5 ஏ மற்றும் சி ஆகியவை அதிகளவில் காணப் படுவதால் செரிமானம் சீராகும் உடலுக்கு தேவையான ஆற்றல் மிக அதிக அளவில் கிடைக்கும். மேலும் பக்க வாத நோய்களைத் தடுப்பதில் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டுமல்லாமல் பேரிச்சம்பழத்தில் மெக்னீசியம் சத்துகள் அதிக அளவில் காணப்படுவதால் இது உடலில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வீக்கங்களை குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. கர்ப்பிணிகள் இந்த பழத்தை பிரசவம் நடைபெறுவதற்கு 4 வாரத்திற்கு முன்பு இருந்து தினமும் உட்கொண்டு வரும் பொழுது பிரசவம் எளிமையாக நடைபெற உதவும். மேலும் பிரசவத்திற்கு பின்பு உடல் எடை குறைக்கவும் இது உதவியாக அமையும்.