இந்தியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன கூகுள் நிறுவனம்..! அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்..!!

Default Image

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஆனது, சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருப்பதாக மக்கள் மற்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும், மிகவும் குறைந்த அளவிலான உற்பத்தி மற்றும் அதிக விலை போன்ற சிக்கல்களால் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை அனைவராலும் கைபற்ற முடியவில்லை. ஆப்பிள் ஐபோன்களை போன்றே ஒரு வரையறுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களாகவே கூகுள் பிக்சல் திகழ்கின்றன. அதனை மனதில் கொண்டு தான் – கூகுள் நிறுவனம் இந்தியர்களுக்கான ஒரு “குட் நியூஸை” அறிவித்துள்ளது.

இந்தியா போன்ற ஸ்மார்ட்போன் சந்தைகளில், மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ் பிக்சல் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

கூகுள் நிறுவனம், பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 எக்ஸ்எல் எனும் பெயரிடப்பட்ட அடுத்த தலைமுறை பிக்சல் ஸ்மார்ட்போன்கள் தீபாவளி திருவிழாவின் போது இந்தியாவை வந்தடையும் என்று கூறுகிறது.

பின்னர் (முன்னர் வெளியான பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஆகியவற்றை போலவே) கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நமது கைகளுக்கு வரும்.

இருப்பினும் மலிவு விலை நிர்ணயத்தில் எந்த கூகுள் ஸ்மார்ட்போன் வெளியாகும் மற்றும் அதன் விலை இலக்கு என்னவாக இருக்கும் போன்ற விவரங்களை வெளியானஅறிக்கை விவரிக்கவில்லை.

ஆனால், வருகிற ஜூலை மாத இறுதிக்குள் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் இருந்து, இந்திய சந்தையில் ஆப்பிள், சாம்சங் மற்றும் அமேசான் போன்ற ஒரு பெரிய நுகர்வோர் மின்னணு பிராண்டாக உருமாறுவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்