அரவிந்த் கேஜ்ரிவால் -சந்திரபாபு நாயுடு சிறப்பு சந்திப்பு …!சந்திப்பின் பின்னணி என்ன?
பாராளுமன்றத்தில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய பா.ஜ.க, அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவை திரட்டுவதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றுள்ள சந்திரபாபு நாயுடு, இன்று காலை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார்.
தங்கள் கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கும்படி சந்திரபாபு, கெஜ்ரிவாலிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதே காரணத்திற்காக சந்திரபாபு நாயுடு, கடந்த வாரம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், பா.ஜ.க, இல்லாத வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் தனது முயற்சி குறித்து இன்று சந்திபாபு நாயுடு, செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.