இந்தியாவில் மீண்டும் ஹார்லி டேவிட்சன் பைக்குகள்.. எப்பொழுது வருகிறது தெரியுமா??

Default Image

இந்தியாவில் இருந்து விலகிய ஹார்லி டேவிட்சன் நிறுவனம், அடுத்தாண்டு ஜனவரி முதல் மீண்டும் இந்தியாவில் தங்களின் விற்பனையை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகளவில் பிரபலமான அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம், இந்தியாவில் அதிகளவில் வரவேற்கப்பட்டது. குறிப்பாக, பல மீடில் க்ளாஸ் பசங்களுக்கு அது ஒரு கனவாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஹார்லி டேவிட்சன், இந்தியாவை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தது.

அதற்கு காரணம், எதிர்பாராத அளவு விற்பனை இல்லாதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனையடுத்து, ஹரியானாவில் செயல்பட்டு வந்த தயாரிப்பு ஆலையும் மூடப்பட்டுள்ளது. இது டீலர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது மட்டுமின்றி, ஹார்லி டேவிட்சன் பைக்குகளை வாங்கிய உரிமையாளர்களுக்கு பெரும் சிரமமாய் அமைந்தது. குறிப்பாக சர்விஸ் செய்வது, உதிரிபாகங்கள் கிடைப்பதில் பெருமளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹார்லி டேவிட்ஸன், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மீண்டும் தங்களின் பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கான அறிக்கையை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. மேலும், தங்களின் இந்திய வாடிக்கையாளர்களுக்கு வாரண்டி மற்றும் ஹார்லி உரிமையாளர் குழுக்களுக்கான செயல்பாடுகளை அடுத்தாண்டு ஜனவரி முதல் தொடங்கும் என்றும் எந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்