மத்திய பிரதேசத்தில் 2,000 புதிய மாடு முகாம் முதல்வர் அறிவிப்பு..!
நேற்று ஊட்டச்சத்து குறைபாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச முதல்வர் சவுகான், மத்திய பிரதேச மாநிலத்தில் சாலைகளில் கால்நடைகள் ஆதரவற்று சுற்றி திரிகின்றன. மாடுகளுக்கு பிரத்தியேகமாக தங்குமிடம் அமைக்கப்படும். 7 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான ஆதரவற்ற கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால், மத்திய பிரதேச அரசு சுமார் 2,000 புதிய மாட்டு முகாம்களை கட்ட உள்ளது.
“அனைத்து மாட்டு முகாம்களும் அரசாங்கத்தால் நடத்தப்படாது, ஆனால், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அவற்றை இயக்கும். மாநிலத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய இவை பயன்படுத்தப்படும் என்று அவர் கூறினார். மாநிலத்தில் பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இனிமேல் ஊட்டச்சத்து பற்றாக்குறையாக உள்ள குழந்தைகளுக்கு முட்டைகளுக்கு பதிலாக பசும்பால் வழங்குவோம். இருப்பினும், இதுவரை கொடுக்கப்பட்ட முட்டைகளை ரத்து செய்வோம் என கூறினார்.