தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று கூடுகிறது திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.
இதனிடையே இன்று கூடுகிறது திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் நடைபெறுகிறது.இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,இன்று காலை 10 மணிக்கு , திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம், சென்னை – அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். அதுபோல உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.