துரோகத்திற்கு துணை போனது தான் அதிமுகவின் தலையாய சாதனை! – எம்.பி.ஜோதிமணி
அமித்ஷா தமிழகத்திற்கு செய்த துரோகங்களை தான் பட்டியலிட முடியும். அந்த துரோகத்திற்கு துணை போனது தான் அதிமுகவின் தலையாய சாதனை.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், விவசாய விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று, ஏர்கலப்பை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஜோதிமணி துண்டை கட்டிக்கொண்டு ஏர் கலப்பை பிடித்து கொண்டு போஸ் கொடுத்தால் விவசாயி ஆக முடியாது என விமர்சனம் செய்தார்.
மேலும், அதிமுகவுக்கும் பாஜகவிற்கு முடிவுகட்டும் தேர்தலாக சட்டமன்ற தேர்தல் அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ், திமுக தமிழகத்திற்கு செய்த சாதனையை பற்றி பட்டியலிட நாங்கள் தயார். ஆனால், அமித்ஷா தமிழகத்திற்கு செய்த துரோகங்களை தான் பட்டியலிட முடியும். அந்த துரோகத்திற்கு துணை போனது தான் அதிமுகவின் தலையாய சாதனை எனக் பதிவிட்டுள்ளார்.