டெல்லி புறப்பட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா!
2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, இன்று காலை டெல்லி புறப்பட்டார். அவரை முதல்வர், துணை முதல்வர், பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட வழியனுப்பி வைத்தனர்.
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா, 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். அவரை முதல்வர், துணை முதல்வர், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதனைதொடர்ந்து மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று சந்தித்து பேசினார். அதனைதொடர்ந்து அமித்ஷா, சென்னை விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டார். விமான நிலையத்தில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் வழியனுப்பி வைத்தனர்.