மதுரை ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து.!
மதுரையில் ஒரே மாதத்தில் 3வது முறையாக ஜவுளிக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட,5 மணி போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
மதுரை தெற்கு மாசி வீதியில் சைபர் அகமது என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடை ஒன்று உள்ளது .அங்கு இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.உடனடியாக பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வரும் முன்னரே ஜவுளிக்கடை மற்றும் குடோனில் தீ மளமளவென பரவி பல லட்சம் மதிப்பிலான ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகள் எரிந்து சாம்பலாக்கியது .
அதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தி தீயை அணைக்க போராடி வந்தனர் .சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தற்போது இந்த தீ விபத்து குறித்த விசாரணையை மதுரை விளக்குத் தூண் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒரே மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் 3 வது முறையாக முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த மாதம் தெற்கு மாசி வீதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை கட்டுபடுத்த முயன்ற போது 2 தீயணைப்பு வீரர்கள் உயிரழந்ததும் ,அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.