அமித் ஷாவை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்..!
தமிழகத்தில் அமித் ஷா நேற்று பிற்பகல் வந்தாா். அவரை முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் உள்ளிட்டோா் வரவேற்றனா். பின் லீலா பேலஸ் நட்சத்திர விடுதிக்கு சென்ற அமித் ஷா சிறிது நேரம் கழித்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு முதல்வர், துணை முதல்வர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது என கூறப்படுகிறது.
இந்நிலையில், அமித் ஷா டெல்லி புறப்படும்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உடன் ஆலோசனை நடத்தினார். உயர்கல்வித்துறையில் மத்திய அரசுக்கும்- தமிழக அரசுக்கும் உள்ள பல முரண்பாடுகள் குறித்தும், சூரப்பா விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.