அதிர்ச்சி தகவல் …!ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடனான தொடர்பு குறித்த வழக்குகளில் 81 பேர் கைது…!
மத்திய அரசு ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடனான தொடர்பு குறித்த வழக்குகளில் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், ஐ.எஸ். இயக்கத்துடனான தொடர்பு குறித்த 23 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
இதில் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 39 பேர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்களும், தேடப்படுபவர்களும் ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து நிதி பெற்றவர்கள் அல்லது நிதி உதவி செய்தவர்கள் என்றும் அஹிர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.