IPL 2018:சிஎஸ்கே வீரர்களுக்கு தொடரும் அதிர்ச்சி வைத்தியம்…!முக்கிய ஒபனர் காலி ..!கலக்கத்தில் ரசிகர்கள்…!

Default Image

வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.

Image result for csk

இந்நிலையில்  ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் காயமடைந்த தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 

அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் திறந்த பேருந்தில் சென்னையை சுற்றிப்பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களிலும் தமிழிலேயே ட்வீட் போட்டு மாஸ் காட்டி வருகின்றனர்.

Image result for csk

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ள சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், ஆஸ்திரேலிய அணியுடான டெஸ்ட் தொடரில் காயம் அடைந்த தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் டூ பிளசிஸின் விரலில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு சில நாட்கள் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

கடந்த தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவரை இந்த தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்.டி.எம் கார்டு முறையை பயன்படுத்தி தனது அணியில் எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்