4,405 கி.மீ. ரயில்பாதை 2017-18ம் நிதியாண்டில் புதுப்பிப்பு…!
ரயில்வே 2017-18ம் நிதியாண்டில் 4 ஆயிரத்து 405 கிலோ மீட்டர் தூரத்திற்கான ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரயில்வேதுறை விடுத்துள்ள அறிக்கையில் ஒரே நிதியாண்டில் எட்டப்பட்ட அதிபட்ச இலக்கு இது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 2004-05ம் நிதியாண்டில் வாஜ்பாய் அரசின் கீழ் 4 ஆயிரத்து 174 கிலோ மீட்டர் இருப்பு பாதைகள் புதுப்பிக்கப்பட்டதே உச்சபட்ச சாதனையாக இருந்தது.
1 லட்சத்து 14 ஆயிரத்து 907 கிலோ மீட்டர் நீள இருப்புப் பாதைகள் இந்திய ரயில்வேயில் உள்ளன. இருப்புப்பாதைகள் புதுப்பிக்கப்பட்டதன் காரணமாக இரயில்கள் தரம்புரண்டு விபத்துக்குள்ளாவது குறைந்துள்ளதாகவும் ரயில்வே கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.