சாதிமறுப்பு திருமணம் செய்தால் ஊக்கத்தொகை! உத்தரகண்ட் அரசு அதிரடி!

Default Image

உத்தரகாண்டில், சாதிமறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50,000 வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இன்றைய இளம் தலைமுறையினர் சாதிமறுப்புத் திருமணம் செய்வதால், பலர் பயங்கரமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ரூ.50,000  ஊக்கத்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆளும் பாஜக அரசு திருமணத்தின் பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருகிற நிலையில், உத்தரகாண்ட் அரசு இப்படி ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில சமூக நலத்துறை அதிகாரி கூறுகையில், சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட அனைத்து சாதி மறுப்பு மற்றும் மத மாற்ற திருமணங்களுக்கும் பணம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும், சாதி மறுப்பு திருமணத்தின் ஊக்கத் தொகையை பெறுவதற்கு, திருமண ஜோடியில் ஒருவர் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை அதிகாரி தீபன்கர் கூறுகையில், சாதி மற்றும் மத மாற்ற திருமணங்களுக்கு, ஊக்கத்தொகை வழங்குவது தேசிய ஒற்றுமை உறவை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்றும் அதற்கு தகுதியான ஜோடிகள் ஊக்கத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும்  தெரிவித்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்