தமிழகத்தில் நாங்கள் செய்ததை பட்டியலிட தயார்.. திமுக தயாரா..? அமித் ஷா..!

இன்று 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். பிற்பகல் 2 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்த அமித் ஷாவை வரவேற்க தமிழக முதல் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் பொறுப்பாளர் சி.டி ரவி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி அமித் ஷா திடீரென காரை நிறுத்திவிட்டு நடைபயணம் செய்தார்.

இதைத்தொடர்ந்து, லீலா பேலஸ் ஹோட்டலுக்கு அமித் ஷா சென்றார். பின்னர், தனது ட்விட்டரில் சென்னை வந்தடைந்தேன்! தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்! என தெரிவித்து தமிழில் ட்விட் செய்தார். பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சரை சந்தித்தார்.

இதையெடுத்து கலைவாணன் அரங்கத்திற்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா  முதலில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி அனுஷாவிற்கு முதல்வர் விநாயகர் சிலையும், துணை  நடராஜர் சிலையும் வழங்கினார். பிறகு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டிய திட்டங்கள் இதோ!

பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய அமித் ஷா தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி இனியும் தொடரும் நம்பிக்கை உள்ளது. உலகின் தொன்மையான தாய்மொழியில் பேச முடியாதது எனக்கு வருத்தமாக உள்ளது. தமிழகத்தின் கலாச்சார பாரம்பரிய மிகவும் தொன்மையானது. ஜெயலலிதா வழிகாட்டுதலின் படி பழனிச்சாமி ஆட்சி சிறப்பாக உள்ளது. ஏழை மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு கிராமங்களில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது.

விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி வழங்கும் திட்டத்தில் பல கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் 45 லட்ச விவசாயிகளுக்கு ரூ.4,400 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 2024-ல் அனைவரும் சுத்தமான குடிநீர் செய்வதே மத்திய அரசு இலக்காக உள்ளது. பாறை போன்ற இந்த ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

சென்னை சென்ட்ரலுக்கு எம்ஜிஆர் சென்ட்ரல் என மோடி அரசு தான் பெயரிட்டது. தமிழகத்தில் மன்மோகன் சிங் அரசு ரூ.16,155 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் மோடி அரசு தமிழகத்திற்கு ரூ.32,850 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் நாங்கள் செய்ததை பட்டியலிட தயார். திமுக தயாரா..? வாரிசு அரசியலை படிப்படியாக பாஜக குறைத்து வந்துள்ளது தமிழகத்திலும் அதை செய்வோம் என கூறினார்.

ஊழலைப் பற்றிப் பேச திமுகவிற்கும், காங்கிரசுக்கும் என்ன தகுதி உள்ளது. குடும்ப அரசியலுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். ஊழல் குற்றச்சாட்டை சொல்லும் முன் உங்கள் குடும்பத்தை திரும்பிப் பாருங்கள். மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என திமுகவினர் குற்றம்சாட்டுகிறார்கள். பத்து ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது என கேள்வி எழுப்பினார்.

author avatar
murugan

Leave a Comment