மறுமணம் செய்தது உண்மை தான், மகிழ்ச்சி – பிரபு தேவாவின் அண்ணன் உறுதி!

Default Image

பிரபு தேவா மறுமணம் செய்தது உண்மை தான் அது எண்கள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி என பிரபு தேவாவின் அண்ணன் ராஜு ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழ் திரை உலகில் பிரபலமான நடன கலைஞராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் பிரபுதேவா. இவர் நடன குழுவில் இருந்த பொழுது ரமலத் எனும் பெண்ணை காதலித்து பல வருடங்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் நயன்தாராவுடனான காதல் காரணமாக  பிரபுதேவாவுக்கு ரமலத் உடன் விவாகரத்து ஆகிவிட்டது. அதன்பின் நயன்தாராவுடனான காதல் முறிவால் மன அழுத்தத்திலிருந்து பிரபு தேவாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்துள்ளது.

டாக்டர் ஹிமானி என்பவர் பிசியோதெரபி சிகிச்சை அளித்ததாகவும் அந்த சிகிச்சை அளிக்கக் கூடிய காலகட்டத்தில் அவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பிரபுதேவாவின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள வீட்டில் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது. ஆனால் அது குறித்த உண்மைத் தன்மைகள் தெரியபடாமல் இருந்தது. இந்நிலையில் இருவரும் கடந்த மே மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு ஒன்றாக தற்போது வாழ்ந்து வருவது உண்மைதான் எனவும் இது தங்களது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக உள்ளது எனவும் பிரபுதேவாவின் அண்ணனும் நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் அவர்கள் தற்பொழுது கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss
Palestinian prisoners released by Israel