விபத்தில் உயிரிழந்த கள்ளக்காதலன் – சடலத்தை பார்க்கமுடியாததால் பெண் செய்த அதிர்ச்சி செயல்!
விபத்தில் உயிரிழந்த தனது கள்ளக் காதலனின் சடலத்தை பார்க்க முடியவில்லை என்ற சோகத்தால் காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் ஜெகஜோதி. இவரது கணவன் முருகனுக்கும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகளும் உள்ளது, இந்நிலையில் குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த ஜெகஜோதி அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த துரைக்கண்ணு எனும் 29 வயது இளைஞருடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் ஒன்றாக கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தது அந்த ஊருக்கே தெரிந்திருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சாலை விபத்து ஒன்றில் சிக்கி துரைக்கண்ணு கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது உடலை உடனே ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்று முறைப்படி கண்ணம்பாளையம் சுடுகாட்டில் அவரது உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டனர்.
ஜெகஜோதி இவரது முறைப்படி மனைவி இல்லை என்பதால் அந்த இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே சடலத்தை பார்க்க முடியவில்லை என்ற வருத்தத்தில் இருந்த அவர் அவரைப் புதைத்த இடத்தில் சென்று மீண்டும் அவ்விடத்தை தோன்ட ஆரம்பித்துள்ளார். ஆனால் அவ்வாறு தோன்ட கூடாது என உறவினர்கள் தடுக்கவே, வீட்டுக்கு வந்த ஜெகஜோதி மன அழுத்தத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார். ஆனால் உடனடியாக உயிரிழப்பு ஏற்படாததால் வேப்பமரத்தில் தானாகவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் மேற்கொண்டு சம்பவ இடத்தில விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இருவருமே உயிரிழந்துள்ள நிலையில் அவரது குழந்தைகள் மிகவும் பரிதாபமாக தற்பொழுது தகப்பனும் தாயும் இன்றி தவித்து வருகின்றனர்.