வெளியானது ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் பிஎஸ்-6 மாடல்.. முந்தைய மாடலை விட விலை அதிகம்!!

Default Image

ஹீரோ நிறுவனம், தனது புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Hero Xtreme 200S) பைக்கின் பிஎஸ்-6 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ்:

பட்ஜெட் பைக்குகளை வெளியிட்டு வரும் ஹீரோ நிறுவனம், தனது 200 சிசி பைக்கான எக்ஸ்ட்ரீம் 200எஸ் (Hero Xtreme 200S)-ஐ வெளியிட்டுள்ளது. இந்திய சந்தையில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், அதன் பிஎஸ்-6 மாடலை கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது, பிஎஸ் 4-ருடன் ஒப்பிடுகையில் கூடுதலாக சில வசதிகளை வழங்கப்பட்டுள்ளது.

என்ஜின்:

அந்தவகையில், இந்த பைக்கில் 199.6 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ப்யூயல் இன்ஜெக்டட், ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8,500 ஆர்பிஎம்மில் 17.8 ஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 16.4 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதனை இயக்க, 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் புதிதாய் எக்ஸ்சென்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இது பிஎஸ்-4 என்ஜினை விட, 0.3 ஹெச்பி பவரும், 0.7 என்எம் டார்க் திறனும் குறைந்துள்ளது. இதனால் பிஎஸ்-6 என்ஜினின் செயல்திறன், சற்றே குறைவாக இருக்கும்.

இதர அம்சங்கள்:

இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 165 மி.மீ. இருக்கும் காரணத்தினால், இதனை இயக்க சுலபமாக இருக்கும். மேலும், 12.8 லிட்டர் பெட்ரோல் டேன்க் கபாஸிட்டி கொண்டுள்ளதால், இதனை லாங் ரைட்க்கு எடுத்து செல்லலாம். இதன் சஸ்பென்ஸனை பொறுத்தவரை முன்பகுதியில் டெலஸ்கோபிக் போர்க்கும், பின் பகுதியில் மோனோ ஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எல்.இ.டி. லைட் வழங்கப்பட்டுள்ளது.

விலை:

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200-எஸ் பைக், ஸ்போர்ட்ஸ் ரெட், பாந்தர் பிளாக் மற்றும் பேர்ல் ஒயிட் ஆகிய 3 நிறங்களில் கிடைக்கும். இதற்கான புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், இந்த பைக் 1.15 லட்சம் முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய மாடலான பிஎஸ் 4-ஐ விட 15,100 ருபாய் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்