இந்த ஆண்டு 2,35,97,311 முறை பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட் என்ன என்பது தெரியுமா ?

Default Image

2020 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 200 பாஸ்வேர்டுகளின் பட்டியலை நோர்ட்பாஸ் (NordPass) வெளியிட்டுள்ளது.

நோர்ட்பாஸ் (NordPass) என்பது பாஸ்வேர்ட் மேலாண்மை சேவை சமீபத்தில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி ,2020-ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 200 பாஸ்வேர்டுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

2 கோடி முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட் இது தான் :

இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது ‘123456’ பாஸ்வேர்ட் தான்.2020-ஆம் ஆண்டில்  மட்டும் இந்த பாஸ்வேர்டை ஏறக்குறைய 2,35,97,311 ( 23 மில்லியனுக்கும் அதிகமான முறை) அதிகமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.25,43,285 பயனர்கள் பாஸ்வேர்டை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் ‘ 123456789 ‘ என்ற பாஸ்வேர்ட் உள்ளது.பிக்சர் 1 (picture1)  என்ற பாஸ்வேர்ட் 3-ஆம் இடத்தில் உள்ளது.மேலும் இந்த பட்டியலில் வெளியாகியுள்ள சில பாஸ்வேர்ட்களை ஹேக்கர்கள்,ஒரு வினாடிக்குள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்றும் நோர்ட்பாஸ் (NordPass) தெரிவித்துள்ளது.இந்த பட்டியலில் Password ,12345678, 111111, 123123, 12345, 1234567890,Senha,1234567,qwerty,Abc123,Million2,000000,1234, Iloveyou உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது.

அதிகம் பயன்படுத்தப்பட்ட பெயர் கொண்ட பாஸ்வேர்ட் மற்றும் உணவுப் பொருள் என்ன ?

நோர்ட்பாஸ் அறிக்கையின்படி, 90,000 க்கும் மேற்பட்ட பயனர்கள்   ‘ஆரோன்431’  (aaron431) என்ற பெயர் உடைய பாஸ்வேர்ட் அதிகம் பயன்படுத்தப்பட்டது என்றும் 21,409 பயனர்கள் உணவுப் பொருளான (chocolate) சாக்லேட்டை பயன்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 37,000 க்கும் அதிகமானோர்  ‘போகிமொன்’ (Pokemon) என்ற பாஸ்வேர்டை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி இடம் : 

இந்த பட்டியலில் 200-வது இடத்தில் உள்ள ‘ஏஞ்சல் 1’ (angel1) என்ற பாஸ்வேர்டை 15,786 பயனர்கள் ,2, 58,800 முறை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் 199-வது இடத்தில் உள்ள ‘தாமஸ்’ (thomas) என்ற பாஸ்வேர்டை  15,817 பயனர்கள் , 2,90,204  முறை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே 2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் , ‘123456’ பாஸ்வேர்ட் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யூகிக்க முடியாத வகையில் பாஸ்வேர்ட்வைத்துக்கொள்வது  அவசியம் :

இது போன்ற பாஸ்வேர்டுகள் ஹேக்கர்களால் மிகவும் எளிதாக யூகிக்க கூடிய வகையில் உள்ளதால் ,உங்களது தகவல்கள் மிகவும் பாதுகாப்பற்றதாக உள்ளது.ஆகவே எளிதில் யாரும் யூகிக்க முடியாத வகையில் பாஸ்வேர்ட் வைத்துக்கொண்டால் உங்கள் தகவல்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

நோர்ட்பாஸ் (NordPass) பட்டியலை காண கிளிக் செய்யவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்