அன்பாய் பெய்த கருணை மழை .! பிக்பாஸில் இந்த வார நிகழ்வினை குறித்து கூறிய கமல்ஹாசன்.!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் கமல்ஹாசன் தோன்றி இந்த வார நிகழ்வுகளை கூறுகிறார் .
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களை வச்சு செய்வது வழக்கம் .அது மட்டுமின்றி நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டு, குறைவான வாக்கை பெற்ற நபர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .
அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் கமல்ஹாசன் அவர்கள் தோன்றி இந்த வாரம் நிகழ்ந்த நிகழ்வுகளை கூறுகிறார்.அதில் காத்திருந்து காத்திருந்து கருணை மழை பெய்தது ,அன்பாய் ..உள்ளங்களின் உண்மை முகங்கள் உணர்வுகளை உரிமையோடு முகர்ந்து கொண்டும் ஒரு புதிய குடும்பம் பூத்திருக்கிறது .குடும்பத்தின் தலைவனாக உங்கள் நான் என்று கூறுகிறார் .இதோ அந்த வீடியோ