ஆப்கன் விமானப்படை தாலிபான்கள் மீது நடத்திய தாக்குதலில் 30 தீவிரவாதிகள் உயிரிழப்பு…!
30 பேர் ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.அரசுப் படையினருக்கு குந்தூஸ் மாகாணத்தில் தாலிபான் இயக்கத்தினர் அணிவகுப்பு நடத்தப் போவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆப்கானிஸ்தானின் விமானப்படையினர் சம்பவ இடத்தை குண்டு வீசித் தாக்கினர். இந்தத் தாக்குதலில் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், மதநல்லிணக்கப் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.