இந்த ஆண்டு இறுதிக்குள் 40 மில்லியன் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் – வெள்ளை மாளிகை
இந்த ஆண்டு இறுதிக்குள் 40 மில்லியன் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தேவையான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியவுடன் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும் திட்டத்துடன் டிரம்ப் நிர்வாகம் தயாராக உள்ளது என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
40 மில்லியன் கொரோனா தடுப்பூசி:
“தடுப்பூசி தொடர்பாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் 40 மில்லியன் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது, வரலாற்றில் ஐந்து மடங்கு வேகமான தடுப்பூசி என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர்கெய்லீ மெக்னானி செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையில், ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி வளர்ச்சியின் மிக வெற்றிகரமான முடிவுகளைப் பதிவுசெய்தன, அதாவது, “மாடர்னா 94.5 சதவிகிதம் மற்றும் ஃபைசர் 95 சதவிகிதம் என்று எங்களுக்குத் தெரியும்,” என்று மெக்னானி கூறினார்.