#BREAKING: ஆன்லைன் ரம்மிக்கு தடை..! அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் .!

Default Image

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை செய்யும் அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். பணம் வைத்து விளையாடுவோர்  கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் தடை செய்யப்படும் என்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வது தடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரம்மி விளையாட்டு நடத்தும் நிறுவன பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தண்டிக்கும் வழிவகை செய்யும், மேலும், தடையை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடினால் 5,000 அபராதம் ஆறு மாதம் சிறை தண்டனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் அபராதம் 2 ஆண்டு சிறை தண்டனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்