#ReleasePerarivalan: ஒன்று திரண்ட திரையுலகம்.!

Default Image

பேரறிவாளனை விடுதலை செய் என்று திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துகளை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பேரறிவாளனை விடுவிக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.

7 பேர் சிறைதண்டனை : 

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்துக்கு தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

7 தமிழர் விடுதலை முழக்கம்:

பல்வேறு அரசியல் கட்சினர் விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் கீழ் திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துகளை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பேரறிவாளனை விடுவிக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.

நடிகர் விஜய் சேதுபதி:

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை ஆளுநர் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வீடியோ வெளிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட்:

தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது.

நடிகர் விஜய் ஆண்டனி ட்வீட்:

நிரபராதியான சகோதிரர் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல.

நடிகர் ஆர்யா ட்வீட்:

நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள்.சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான்.

இயக்குநர் பா.ரஞ்சித் ட்வீட்:

சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி.

முதல்வருக்கு சமுத்திரக்கனி கோரிக்கை:

அறிவின் அப்பாவின் உடல் நலன் விசாரித்தேன். மிக கவலை அளிக்கிறது. மாண்புமிகு முதல்வரே மேதகு ஆளுநரை சந்தித்து அறிவு விடுதலை கோப்பில் உடனே கையெழுத்து பெற்றிடுக.

“ஒருபோதும் குற்றம் செய்யாத ஒரு மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை;
தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம்” எங்கள் கோரிக்கை முதல்வர் மற்றும் ஆளுநர் அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

இயக்குநர் ராஜுமுருகன் ட்வீட்:

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தாமதம் எதற்கு.? முதல்வரே… ஆளுநரே… அற்புதம் அம்மாளின் 30 வருட கண்ணீரை துடைத்து, பேரறிவாளன் என்ற, உடல் நலிவுற்றுக்கொண்டிருக்கும் நிரபராதி மகனுக்கான நீதியை விடுதலையை உடனே சாத்தியப்படுத்துங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
chennai budget
hardik pandya and suryakumar yadav
Puducherry CM Rangasamy
RRB alp exam
Chennai Corporation Budget 2025
TN Ration shop