ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி எம்ஜிஆர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி மனு …!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி எம்ஜிஆர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது .
இதற்கு முன் கடந்த மார்ச் 27-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, ஏப். 8ம் தேதி தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
மேலும் கர்நாடக தேர்தல் முடியும் வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்றும் ,திமுக உள்ளிட்ட எந்த கட்சியும் மக்களுக்காக போராடினால் கலந்து கொள்வோம் என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.