ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு…!
ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் விவரம்: தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும் 51 ஆம் நாளாக குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .
சற்று முன் ஸ்டெர்லைட் ஆலைக்கு சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் வழங்கிய சிப்காட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக விளக்கம் தர தூத்துக்குடி மாவட்ட சிப்காட் திட்ட இயக்குநருக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.