2018 IPL:ஐபிஎல்லில் இரண்டு தலைகளையும் முதலில் காலி செய்ய வேண்டும் …!அது தான் இந்த இளம்புயலின் ஆசை,கனவு, லட்சியம் ……..!

Default Image

பதினோறாவது ஐபிஎல் திருவிழா, ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது.8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொண்டிருக்கிறது.

Image result for 2018 ipl teams

அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள ஐ.பி.எல் தொடரின் மூலம் தோனி மற்றும் கோஹ்லியின் விக்கெட்டை கைப்பற்றி காத்திருப்பதாக இந்திய அணியின் இளம் வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

Image result for DHONI KOHLI CSK VS RCB

இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் டி.20 தொடர் 7ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.

Image result for DHONI KOHLI CSK VS RCB

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்ச்சாளர் குல்தீப் யாதவ், இந்த தொடரில் தோனி மற்றும் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்துவதே தனது இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

Image result for DHONI KOHLI CSK VS RCB

இது குறித்து குல்தீப் யாதவ் கூறியதாவது, “இந்த தொடரில் தோனி மற்றும் கோஹ்லியின் விக்கெட்டுகளை கைப்பற்றுவது ஒன்று மட்டுமே எனது இலக்கு.

Image result for குல்தீப் யாதவ்

இருவருடன் ஒரே அணியில் விளையாடி வருவதால் அவர்களுக்கு எதிராக பந்து வீசும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை இதற்காக நான் வருந்தவும் செய்திருக்கிறேன், ஆனால் இந்த ஐ.பி.எல் தொடர் மூலம் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது, இதனை வீணடிக்க மாட்டேன்.

Related image

மற்ற தொடர்களை விட இந்த தொடர் அதிக முக்கியத்துவம் வாந்தததாக பார்க்கப்படுகிறது, என்னால் முடிந்த வரை இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார். இளம் வீரரான குல்தீப் கடந்த சில மாதங்களாகவே சிறந்த முறையில் பந்து வீசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்