IMDP தரவரிசையில் முதலிடத்தை பிடித்த சூரரை போற்று.!
IMDP தரவரிசையில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ராட்சசன் மற்றும்The Shwashank Redemption ஆகிய படங்களின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார் .மேலும் ஊர்வசி , கருணாஸ் ,காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார் . திரையரங்குகளில் பார்க்க எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஓடிடியில் கண்டு கழிக்கின்றனர்.
படத்தை பார்த்த அனைவரும் சூர்யா அருமையாக நடித்திருப்பதாகவும்,இதுவரை பார்க்காத சூர்யாவை திரையில் பார்க்க முடிந்ததாகவும் பாராட்டி வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் , வசூல் ரீதியாகவும் வரலாறு காணாத அளவுக்கு வெற்றி பெற்று வருகிறது. பல பிரபலங்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டு மழை பொழிந்து வருவதோடு,2020-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் IMDP தரவரிசையில் உலகளவில் 9.3 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்த ஹாலிவுட் படமான The Shwashank Redemption மற்றும் 8.7 புள்ளிகளை பெற்ற ராட்சசன் பட சாதனையையும் முறியடித்து IMDP தரவரிசையில் சமீபத்தில் வெளியான சூரரை போற்று 9.4 வரை புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.