குமரெட்டியாபுரம் மக்கள் கடும் எதிர்ப்பு ..!முழுக்கமுழுக்க ஸ்டெர்லைட் ஆலைக்குத் துணைபோகும் நடவடிக்கை…!

Default Image

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும் 51 ஆம் நாளாக குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும் 51 ஆம் நாளாக குமரெட்டியாபுரம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தக் கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் குடிநீர் பைப்பை சுத்தம்செய்வதற்காக நேற்று வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் ஊர்மக்கள் குடிநீர்க் குழாயைச் சுத்தம்செய்ய அனுமதிக்கவில்லை. இன்று அதிகாலை, மீண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடிநீர்க் குழாயை அகற்றிவிட்டு, சுத்தம்செய்ய போர்வெல் அமைக்கும் தொழிலாளர்களுடன் வந்து ஊரின் நுழைவுப் பகுதியில் உள்ள குழாயை அகற்ற முற்பட்டனர். மீண்டும் கிராம மக்கள் முற்றுகையிட்டதால், அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர். போர்வெல் லாரியும் கிளம்பியது.

இந்த ஆலையால் நிலத்தடி நீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எங்கள் கிராமத்திலுள்ள 6 குடிநீர்க் குழாய்த் தண்ணீரைப் பரிசோதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், குடிநீர் போர்வெல்களையெல்லாம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து கழற்றிவிட்டு, அவற்றையெல்லாம் சுத்தப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதைச் சுத்தப்படுத்துவதன்மூலம், நச்சுக்கள் கலந்த கழிவுகள் வெளியேற்றபட்டுவிடும். இதை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். இது, முழுக்கமுழுக்க ஸ்டெர்லைட் ஆலைக்குத் துணைபோகும் நடவடிக்கைதான். இதுபோன்ற செயல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், இந்த நீரைப் பரிசோதனைசெய்ய வேண்டும்” என்றார்கள்.அவர்கள் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு முன் ஸ்டெர்லைட் ஆலைக்கு சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் வழங்கிய சிப்காட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக விளக்கம் தர தூத்துக்குடி மாவட்ட சிப்காட் திட்ட இயக்குநருக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்