விமானி இல்லாமல் பறக்கும் விமானம்…!!
கடந்த 2012ம் ஆண்டு டெக்னாலஜி பற்றி செய்தி வெளியிடக்கூடிய இனணயதளம் ஒன்று ரேபாட்டிக்ஸ் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. இதில் “ஆட்டோ பைலட்” என்ற தொழிற்நுட்பம் தான் 787 ஜெட் விமானத்தை இயக்குவதாக குறிப்பிட்டிருந்தது.
மேலும் விமானிகள் அவசர காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளை சீர் செய்வும், தேவைப்பட்டால் விமானத்தை தன் கட்டப்பாட்டிற்கு கொண்டு வரவும் மட்டுமே உள்ளனர் என்று இந்த செய்திகள் வெளியாகியிருந்தது.
இது குறித்து சில விமான நிறுவனங்களிடமும், விமானிகளிடமும் கேட்டபோது முற்றிலுமாக மறுத்துள்ளனர். விமானிகள் தான் விமானத்தை இயக்குகின்றனர் என்றும் விமானிகள் இல்லாமல் விமானங்கள் தானாக இயங்கும் திறனுடன் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை என்றும் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் விமானத்தை முழுவதும் விமானிதான் இயக்குகிறார் என்றும் சொல்லி விட முடியாது. 1930களில் மட்டுமே அவ்வாறான தொழிற்நுட்பம் இருந்தது. அவ்வாறான விமானங்கள் தற்போது பயன்பாட்டடில் இல்லை தற்போதைய விமானங்களில் சில ஆட்டோமெட்டிக் தொழிற்நுட்பங்கள் இருக்கிறது.
ஆளில்லா விமானங்களில் உள்ள தொழிற்நுட்பத்தின் படி பயணிகள் விமானங்களை இயக்க முடியாது. தற்போதுள்ள விமானங்களை விமானங்களை தரையிறக்குவதற்கு “ஆட்டோலேண்ட்” என்ற தொழிற்நுட்பம் உள்ளது. இந்த தொழிற்நுட்பம் ஒரு சதவீத்திற்கும் குறைவான வாய்ப்பில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதுவரை உலகில் விமானத்தை டேக் ஆப் செய்ய இதுவரை எந்த தொழிற்நுட்பமும் இல்லை, எல்லா விமானங்களும், மேனுவலாக மட்டுமே டேக் ஆப் செய்யப்படுகிறது.
நவீன விமான தொழிற்நுட்பத்தையும், நவீன அறுவை சிகிச்சை கருவியையும் ஒப்பிடலாம் தற்போது உள்ள அறுவை சிகிச்சை கருவி அறுவை சிகிச்சையில் போது என்ன நடக்கிறது என டாக்டருக்கு சொல்லும், அதை பொருத்து டாக்டர் பரிந்துரைப்பர் அதை கட்டளையாக ஏற்று அறுவை சிகிச்சை செய்யும். இது போன்று தான் விமானங்களில் நடப்பது, விமானிக்கு வரும் கட்டளைகளை விமானிக்கு தெரிவிக்கும் அதை பொருத்து விமானிகள் கட்டளையிடுவர்கள் அதற்கு தகுந்தார்போல் விமானங்கள் செயல்படும்.
தற்போது விமானி இல்லாமல் இயக்கும் தொழிற்நுட்பத்தை போயிங் நிறுவனம் தயாரித்து, அதை பரிசோத்தும் உள்ளது. எனினும் அந்த தொழிற்நுட்பம் பரிசோதனை கட்டத்தில் மட்டுமே உள்ளது. இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.