அருண் விஜய்யின் பர்த்டே ஸ்பெஷல்.! சினம் பட போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி.!
அருண் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது சினம் பட போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று சினம் .ஜீஎன்ஆர் குமாரவேலன் இயக்கும் இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடித்துள்ளார் . மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய்யின் தந்தையும் , நடிகருமான விஜயகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைக்க கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார் .
இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் . கொரோனா ஊரங்கிற்கு பின்னர் இந்த படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டது . ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது .
இன்று அருண் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக சினம் படக்குழுவினர் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் . இந்த போஸ்டரை விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் உள்ள அருண் விஜய்யின் இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Happy to share #Sinam poster.#HBDArunVijay brother @arunvijayno1 @MSPLProductions @kaaliactor @gnr_kumaravelan @madhankarky @ShabirMusic @gopinathdop @silvastunt @DoneChannel1 #HBDAV pic.twitter.com/dzWrHVev30
— VijaySethupathi (@VijaySethuOffl) November 19, 2020