இனி கார்கள் நம்பர் பிளேட்களுடனேயே விற்பனைக்கு வரும்…!!!

Default Image

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் கூடவே நம்பர் பிளேட்களும் சேர்த்து வரவுள்ளது விரைவில். நம்பர் பிளேட்டிற்கான கட்டணம் காரின் கட்டணத்துடன் இணைக்கப்படவிருக்கிறது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியுள்ளார்.

தற்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நம்பர்கள் வழங்கப்படுகிறது. அந்த நம்பர்களை கார் வைத்திருப்பவர்கள் தனியார் நிறுவனங்கள் மூலம் தங்கள் காரில் பதிந்து வருகின்றன

இந்நிலையில் அந்த நடைமுறையை மாற்றி மத்திய போக்குவரத்து அமைச்சகம் இனி கார் தயாரிப்பாளர்களே நம்பர் பிளேட்டுடன் கார்களை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.இதனால் பல நண்மைகள் உள்ளன என்று அவர் கூறினார்.

முதலில் நம்பர் பிளேட்டில் நம்பர் பதியப்பட்ட நம்பருடன் கார் வெளியாகும் விரைவில் காரிலேயே நம்பர்கள் பொறிக்கப்பட்டு வெளியிடப்படும் என அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் :”இனி கார் தயாரிப்பார்களே, காரின் நம்பர் பிளேட்களை பொருத்தி விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளோம்.

இதன் மூலம் கார் வாங்குபவர்கள் தேவையில்லாத அலைச்சல்களை குறைக்க முடியும். காரின் நம்பர் பிளேட்களுக்கான பணம் இனி காரின் விலையுடனேயே சேர்க்கப்படும். ” இவ்வாறு கூறினார்.

தற்போது இந்தியாவில் கார்களுக்கு ரூ 800 முதல் ரூ 50,000 வரையில் கார்களுக்கு நம்பர் பிளேட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இது முற்றிலும் தவிர்க்கப்பட்டு ஒரு காருக்கான நம்பர் பிளேட்களை அரசின் விதிமுறைகளின் படி இனி கார் நிறுவனங்களே டிசைன் செய்யும்.

மேலும் காரின் பாதுகாப்பு அம்சம் குறித்த விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை எனவும், விலை குறித்த காரில் இருந்து விலை அதிகமாக கார் வரை ஒரே மாதிரியான குறைந்த பட்ச பாதுகாப்பு அம்சங்களுக்கு தகுந்த படிதான் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு ஜூலை முதல் கார்களில் டிரைவர் சீட்டில் ஏர் பேக், சீட் பெல்ட் போடாவிட்டால் எச்சரிக்கும் விளக்கு, 80 கி.மீ.,க்கு அதிக வேகத்தில் செல்லும் போது எச்சரிக்கும் கருவி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் ஆகிய கருவிகளை கட்டாயமாக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்