சர்வதேச ஆண்கள் தினம் : ஆண்கள் எடையை குறைக்க இந்த விஷயங்களை செய்தாலே போதும் .!

Default Image

ஆண்கள் தங்கள் எடையை குறைக்க கீழ்க்கண்ட விஷயங்களை செய்வதன் மூலம் எளிதாக உடல் எடையை குறைக்கலாம்.

உலகம் முழுவதும் வருடம் தோறும் நவம்பர் 19-ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது .ஒவ்வொரு ஆணும் தங்கள் வாழ்நாளில் குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்கின்றனர் .நம் குழந்தை நன்றாக இருக்கும் வேண்டும் என்பதற்காக தங்களது உடம்பை பற்றி கூட சிந்திக்கமால் ஆண்கள் நாள் முழுக்க வேலை செய்து சம்பாதிக்கிறார்கள் .

அவ்வாறு தனது உடம்பையும் கவனிக்காமல் உழைக்கும் ஆண்களுக்கு உடல் எடையை குறைப்பதற்கான சில டிப்ஸ்கள் இங்கு உங்களுக்கான தினத்தில் வழங்கப்பட உள்ளது.பெண்களை விட ஆண்களுக்கு உடம்பில் டெஸ்டோஸ்டிரோன் அதிகம் இருப்பதால் எடை குறைப்பது அவர்களுக்கு எளிதாக இருக்கும்.நாள் முழுக்க வேலை செய்யும் ஆண்கள் சிறுது நேரம் உங்கள் உடல்நலனுக்காக ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதன் மூலம் பீர் குடித்து உருவான தொப்பை கூட எளிதில் போய் விடும் .

தினசரி செய்ய வேண்டியவை:

அதில் முதலில் எளிதானது நீங்கள் தினமும் பயன்படுத்தும் லிப்ட்க்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துவதன் மூலம் எடையை குறைக்க இயலும் .அதே போன்று தினமும் மூன்று வேளை அதாவது காலையிலும் ,மதிய உணவு உணவு உண்ட பின்னரும் ,இரவு உணவு பின்னரும், மற்றும் வேலை நேரத்திலும் 15 நிமிடங்கள் நடந்தால் உடல் எடையை குறைக்கலாம் .

உடற்பயிற்சி:

அதே போன்று விடுமுறை தினங்களில் குடும்பத்தினருடனும் , நண்பர்களுடனும் நேரத்தை செலவிட விரும்புபவர்கள் பலர் .அந்த நேரத்தில் செய்யும் சில விஷயங்கள் உங்களது உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.அது என்னவென்றால் நண்பர்களுடன் ஜாகிங் செல்வது அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற விஷயங்கள் செய்வதன் மூலம் நேரத்தை செலவிட்டது போன்றும் இருக்கும்,உடல் எடையை குறைத்தது போன்று இருக்கும்.அதே போன்று வார இறுதியில் குடும்பத்துடன் விளையாடுவதால் நமது உடல் மற்றும் ஆன்மா ஆகிய இரண்டும் ஆரோக்கியமாக இருக்கும்.

உறக்கம்:

குடும்பத்தை காப்பாற்ற 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் தங்களது முழு நேரத்தையும் வேலைக்கே செலவிடுகிறார்கள் .அப்போது அவர்களது தூங்கும் நேரம் குறைகிறது .அதனால் ஒற்றை தலைவலி , முதுகுவலி, உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுகிறார்கள்.நன்றாக தூங்காத ஆண் ஒருவர் அதிக உணவை சாப்பிடுவார்கள் என்றும்,அது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது.எனவே ஒரு நாளில் ஒரு ஆண் கண்டிப்பாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.

மன அழுத்தம்:

குடும்பத்தை பற்றியே எப்போதும் யோசிக்கும் நீங்கள் ஒரு நிமிடம் உங்களை பற்றியும் சிந்திப்பதன் மூலம் நீண்ட கால வாழும் வாய்ப்பை பெறுவீர்கள் .குடும்பம் ,வேலை என பல ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.குறிப்பாக 25 முதல் 35 வயதுக்குட்பட்டோர்கள் தான் அதிகம் மன அழுத்தம் உடையவர்களாக இருப்பார்கள்.இந்த மன அழுத்தம் ஆண்களின் எடையை அதிகரிக்குமாம் .எனவே இந்த மன அழுத்தத்தை மாற்ற குடும்பத்துடன் சுற்றுலா உள்ளிட்ட மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபடுவது நல்லது.

உணவு வகைகள்:

அதே போன்று புரதம் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ‌.ஏனெனில் இந்த புரதம் கலந்த உணவினை சாப்பிடுவதால் பசியை குறைத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் .அந்த வகையில் கோழி,முட்டை ,வான்கோழி ,மெலிந்த மாட்டிறைச்சி,சில மீன் வகைகளில் புரதங்கள் அடங்கும் .எனவே இதனை சாப்பிடுவதன் மூலமும் உடல் எடையை குறைக்க இயலும் ‌.

ஆல்கஹால் மற்றும் ஜங் உணவு வகைகளை குறைத்து விட்டு கொழுப்பு இல்லாத உணவுகளையும் , ஆரோக்கியமான உணவுகளையும் உண்பதால் உடல் எடை அதிகரிக்காமல் நம்மால் பார்த்து கொள்ள முடியும்.இவை எல்லாம் ஒரு ஆண் செய்வதன் மூலம் நீண்ட காலம் குடும்பத்துடன் வாழ முடியும் .எனவே கிடைக்கும் நேரத்தில் இவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்