மருத்துவ கலந்தாய்வு : 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!
நேற்று மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்களில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில், இந்த கலந்தாய்வை முதல்வர் பழனிசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், தரவரிசை பட்டியலில் 951 பேர் இடம் பெற்றுள்ள நிலையில், முதல் 3 நாட்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்பு தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேற்று இந்த கலந்தாய்வில் கலந்து கொண்ட 262 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.