BS6 தர எரிபொருள் கிடைக்கும் ஒரே இடம் டெல்லி மட்டுமே..!!

Default Image

ஏப்ரல்  முதல் டெல்லியில் BS6 தர பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமே எரிபொருள் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1, 2020 ஆம் ஆண்டு முதல் BS6 தர பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது, ஆனால் டெல்லியில் பெருகி வரும் காற்று மாசுபாடு மற்றும் வாகன நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே BS6 தர எரிபொருளை மட்டுமே விற்பனை செய்ய முடி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பெருகி வரும்  காற்று மாசு காரணமாக ஏற்கனவே பத்து வருடங்களுக்கு மேலான பழைய கார்களுக்கு தடையும் மேலும் ஆட் ஈவன் முறையும் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

BS6 தர எரிபொருள் வெளியிடப்பட்டாலும் BS6 தர கார்கள் இந்தியாவில் அதிகம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில விலையுயர்ந்த கார் மாடல்கள் மட்டுமே BS6 தர எஞ்சினில் கிடைக்கிறது. BS6 தர எரிபொருளில் சல்பர் அளவு மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் BS6 தர மாசுக்கட்டுப்பாடு  ஏப்ரல் 1, 2020 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்தியா முழுவதும் வாகனங்கள் மற்றும் எரிபொருள் என அனைத்துமே BS6 தரத்தில் மட்டுமே கிடைக்கும். தற்போது BS6 தர எரிபொருள் டெல்லியில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்