முட்டாள் தினத்திற்காக ஒரு மாடலை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டது…!!
ஹோண்டா நிறுவனம் திறந்த அமைப்பு கொண்ட CR-V ரோட்ஸ்டெர் கான்செப்ட் மாடலின் பாடங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மேலும் இதன் விற்பனை இன்று முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் மற்ற மாடல்கள் போல் அல்லாமல் முழுவதும் திறந்த மாடலாக மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மாடலின் விலை மூடிய CR-V மாடலின் விலையில் பாதி தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள படங்கள் ஏதும் போட்டோஷாப் செய்ததில்லை, உண்மையான ஒரு CR-V மாடலின் மேற்கூரையை வெட்டி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திறந்த அமைப்பு கொண்ட ஹோண்டா CR-V ரோட்ஸ்டெர் ஏதும் உண்மையாக வெளியிடப்படவில்லை, முட்டாள் தினத்திற்காக மட்டுமே அனைவரையும் ஏமாற்ற இப்படி ஒரு மாடலை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டது போன்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.