தீவிர பயிற்சியில் இஷாந்த் சர்மா.. மீண்டும் இந்திய அணியில் பங்கேற்க வாய்ப்பு?

Default Image

காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் இஷாந்த் சர்மா இடம்பெறாத நிலையில், தற்பொழுது அவர் சின்னசாமி மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆஸ்திரேலியா சென்றடைந்த கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பங்கேற்ற இளம் வீரர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை.

ஐபிஎல் தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியின்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அதனைதொடர்ந்து அவரை ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் எடுக்கவில்லை. தற்பொழுது காயத்தில் இருந்து இஷாந்த் சர்மா மீண்டு வந்த நிலையில், அவர் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பயிற்சியை தொடங்கினார்.

இஷாந்த் சர்மா, ஆஸ்திரேலியாவில் பந்துவீசிய நல்ல அனுபவம் கொண்டவர். தற்பொழுது அவர் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார். இதில் அவர் முழு ஃபிட்னெஸ் அடைந்தால், இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒருநாள் போட்டி, 27ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து நடைபெறவுள்ள டி-20 தொடர், டிசம்பர் 4ஆம் தேதி 11ஆம் தேதி நடைபெறும் எனவும், நான்கு டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்