ஊட்டியில் மருத்துவக் கல்லூரிக்காக 1,838 மரங்கள் வெட்ட அனுமதி..!
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ரூ.447.32 கோடி செலவில் அரசு மருத்துவ கல்லூரி அமையவுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம்மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், ஊட்டி வனப்பகுதியில் அமையவுள்ள மருத்துவ கல்லூரி க்காக அங்கு 1,838 அயல்நாட்டு மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது. கல்லூரி அமையவுள்ள 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை, 90% யூக்கலிப்டஸ் மரங்களே என தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
வெட்டப்படும் மரங்களுக்கு பதில் வாழப்பாடியில் மரங்கள் நடப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.