வடோதரா கோர விபத்து ! பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்
வடோதராவில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை குஜராத்தின், வடோதரா மாவட்டத்தில் இரண்டு லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,விபத்தில் காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்தில் ஐந்து பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வடோதராவில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “வடோதரா விபத்து குறித்து மிகுந்த வருத்தமுற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் துணை நிற்கிறேன். காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அரசு நிர்வாகம் விபத்து ஏற்பட்ட இடத்தில் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
Saddened by the accident in Vadodara. My thoughts are with those who lost their loved ones. Praying that the injured recover soon. The administration is providing all possible assistance at the site of the accident.
— Narendra Modi (@narendramodi) November 18, 2020