1.3 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட விஸ்கி பாட்டில் ஓவியம்!
வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் விஸ்கி பாட்டில் ஓவியம் 1.3 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வின்ஸ்டன் சச்சில் பிரிட்டன் ராணுவ அதிகாரி மட்டுமல்லாமல் பிரிட்டன் அரசியல்வாதி, எழுத்தாளர் பேச்சாளர் மற்றும் ஓவியர் என பல்வேறு சிறப்பு பெருமைகளைக் கொண்டவர். இவர் வரைந்த பல ஓவியங்கள் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் போது தலைவர்களின் விருப்பமான விஸ்கி ஒன்றை எண்ணெய் ஓவியமாக வின்ஸ்டன் சர்ச்சில் அவர்கள் வரைந்துள்ளார். இந்த ஓவியத்தில் 1930 இல் உள்ள பிளாக் லேபில் விஸ்கி பாட்டில், ஒரு குடம் மற்றும் கண்ணாடிகள் உடன் கூடிய இரு கிளாஸ் ஆகியவற்றை கொண்டுள்ளதாக இருக்கிறது.
தற்பொழுது இதுஆன்லைன் மூலமாக ஏலத்துக்கு விற்பனை செய்யப்பட்ட போது 1.3 மில்லியன் டாலர் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இது ஒரு தம்பதியினருக்கு விற்கப்பட்டு அவர்களின் மரணத்திற்குப் பின்பு தற்பொழுது ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் தான் இது முந்தைய ஏலத்தை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.