உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம்…!டெல்லியை அழித்து விடாதீர்கள்…!
உச்சநீதிமன்றம் டெல்லியை அழித்து விடாதீர்கள் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது .
டெல்லியில் கட்டடங்களுக்கு சீல் வைக்கும் விவகாரத்தால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும் உச்சநீதிமன்றம் அவதானித்துள்ளது.நீதிபதிகள் அதிகாரிகள் கடமையைச் செய்யத் தவறிவிட்டதால் மிகப்பெரிய பிரச்சினையாக இது விஸ்வரூபம் எடுத்திருப்பதாகவும் கண்டித்துள்ளனர்.
பல்வேறு குடியிருப்புகள் மற்றும் அனுமதி பெறாத வணிக கட்டடங்களுக்கு டெல்லியில் சீல் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததற்கு கடும் எதிர்ப்பு காணப்படுகிறது.டெல்லியில் கட்டடங்களுக்கு சீல் வைப்பதற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.