தினமும் முட்டை சாப்பிடுவது ஆபத்தா .? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

Default Image

தினமும் முட்டை சாப்பிடுவதன் மூலம் நீரழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் உணவுடன் முட்டை சேர்த்து சாப்பிடுவது வழக்கம் . சிலர் வேக வைத்தும் ,பாயில் செய்தும்,துருவல் செய்தும் சாப்பிடுவார்கள் . இந்த முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் ஏராளமான நன்மைகள் உள்ளது என்று பார்த்திருப்போம் . ஆனால் இதனால் ஆபத்தும் உள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது தினமும் ஒரு முட்டையோ அல்லது கூடுதல் முட்டையை உட்கொள்பவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிகள் உள்ளது .இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் நீரழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு 60% அதிகம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த முட்டை உட்கொள்வதால் ஏற்படும் நீரழிவு நோய் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தென்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் தலைமையில் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 2009 வரை சீனா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் கத்தார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது .

கடந்த சில தசாப்தங்களாக , மக்கள் பராம்பரிய உணவுகளில் இருந்து விலகி இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவு வகைகளையே அதிகம் உட்கொள்வதாகவும் ,அதிலும் 1991-2009 காலாண்டில் முட்டை உட்கொள்பவரின் எண்ணிக்கை இரு மடங்காக சீனாவில் அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் ஜேர்னல் ஆஃப் நியூட்டிரிஷனில் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

முட்டையை சாப்பிடுவதற்கும் , நீரழிவு நோய்க்கான தொடர்பை குறித்தும் ஆய்வு நடத்திய போது ,தினமும் முட்டை உட்கொள்வதன் மூலம் மனிதனின் உடலில் ஒரு நாளைக்கு 38 கிராம் மேல் வரை அதிகரித்து ,அது 25% நீரழிவு நோய்க்கான அபாயத்தை அதிகரிப்பதாக கூறியுள்ளனர்.

அதே போன்று நாளொன்றுக்கு ஒன்றுக்கும் மேலான முட்டைகளை தவறாமல் சாப்பிடுவதன் மூலம் பெரியவர்களுக்கு நீரழிவு நோய்க்கான வாய்ப்பு 60% அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் நிபுணரும் ,பொது சுகாதார நிபுணருமான மிங் லி கூறினார்.சீனாவில் பெரும்பாலான நபர்களுக்கு நீரழிவு நோய் முற்ற காரணம் அதிக முட்டை உட்கொள்வதால் தான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .

மேலும் இந்த நீரழிவு நோய்க்கு மற்றொரு முக்கிய காரணி டயட் என்றும் கூறியுள்ளார் . இவர்கள் நடத்திய ஆய்வில் சீனாவில் உள்ள 50 வயதான 8,545 பெரியவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்