மற்றவர்களை விட வீடியோ கேம் விளையாடுபவர்களே மகிழ்ச்சியானவர்கள் – ஆக்ஸ்போர்ட் ஆய்வில் தகவல்!

Default Image

மற்றவர்களை விட வீடியோ கேம் விளையாடுபவர்களே மகிழ்ச்சியானவர்கள் என ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் சார்பில் அணிமல் கிராசிங் மற்றும் பிளான்ட்ஸ் & சோம்பீஸ் வீடியோ கேமை அடிப்படையாக வைத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பலர் நீண்ட நேரமாக விளையாடுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் தான் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளனர். மூவாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டு முடிவு கூறப்பட்டுள்ளது, மிகவும் வியப்பை ஏற்படுத்தக் கூடிய வகையிலான முடிவுகள் வெளியாகி உள்ளது.

அதாவது ஒரு நாளுக்கு 4 மணி நேரம் வீடியோ கேம் விளையாடுபவர்கள் மற்றவர்களை விட அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் மட்டுமல்லாமல் மற்ற வீடியோ கேம்களை விளையாடுபவர்களுக்கும் இதே மனநிலைதான் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பதாக வந்த ஆய்வு முடிவுகளுக்கு மாறாக தற்போது ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ள முடிவால் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதாக முதலில் கூறப்பட்ட பல ஆய்வு முடிவுகள் பொய்த்து போய் இருக்கிறது. மன உளைச்சலால் வீடியோ கேம் விளையாடுபவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான மக்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளும் பொழுது இதை விட மிக துள்ளியமான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்