கட்டுப்பாடுகளுடன் கர்நாடகாவில் திறக்கப்பட்ட கல்லூரிகள்!

Default Image

கட்டுப்பாடுகளுடன் கர்நாடகாவில் இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது, ஆன்லைன் மூலமாகவும் பங்கேற்கலாம்.

2020 ஆம் ஆண்டு துவங்கியது முதலே உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாணவர்களின் படிப்பு கருதி அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதில் ஒன்றாக ஆன்லைன் மூலமாக நடத்தி வந்த பாடங்கள் தற்பொழுது நேரில் கல்லூரிகளுக்கு சென்று ஆசிரியர்களும் மாணவர்களும் பயிலலாம் என தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கர்நாடகாவில் பட்ட மேற்படிப்புக்கான கல்லூரிகளில் இன்று முதல் திறக்கப்பட இருக்கிறது. புதிய கல்வி ஆண்டு துவங்கி ஏற்கனவே மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது கொரோனா தொற்றின் வேகம் சற்றே குறைந்துள்ளதால் கர்நாடகாவில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

இன்று முதல் கலை, அறிவியல், பொறியியல் மற்றும் சட்டம் உள்ளிட்ட பாடங்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு கல்லூரிகளைத் திறக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டிருந்தார். அதனை அடுத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகள் உட்பட அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சமூக இடைவெளி கொண்ட இருக்கைகளுடன் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் கல்லூரிக்கு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்புக்கு நேரடியாக செல்வதற்கு விருப்பம் இலலாத மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கற்றுக் கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்