மத்திய அரசு காவிரி விவகாரத்தில் தாமதித்தால் சட்ட ரீதியாக போராட்டம் …!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், மத்திய அரசு காவிரி விவகாரத்தில் தாமதித்தால் சட்ட ரீதியாக போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கவர்னர் கிரண்பேடியிடம் வலியுறுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார். இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.