மகேந்திர சிங் தோனிக்கு பத்ம பூஷன் விருது …!இராணுவ உடையில் கம்பீரமாக வந்த தோனி…!
இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கபட்டது.
இந்தியாவில் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பத்மபூஷன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு 2018-ஆம் ஆண்டுக்கான நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கபட்டது.
இந்நிலையில், டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் நிகிழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில்,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு பத்ம பூஷன் விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கெளரவித்தார்.
இதன் மூலம் பத்மபூஷன் விருதை பெரும் 11-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். ஏற்கெனவே கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும்,தோனிக்கு ஏற்கெனவே மதிப்பு மிக்க ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும், பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.