‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்டம் சோதனை.!
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3ஆம் கட்டம் சோதனை தொடங்கப்படுகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘கோவாக்சின்’ இப்போது 3ஆம் கட்டதிற்கு செல்கிறது என்று பாரத் பயோடெக் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லாநேற்று தெரிவித்தார்.
இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்த நிறுவனம்,கொரோனாவுக்கான மற்றொரு தடுப்பூசியை உருவாக்கி வருகிறது, இது மூக்கு மூலம் செலுத்தபடும் என்றும் இது அடுத்த ஆண்டுக்குள் தயாராக வாய்ப்புவுள்ளது என்று கூறியது.
மேலும், கொரோனா தடுப்பூசிக்கான ஐசிஎம்ஆருடன் நாங்கள் கூட்டுசேர்ந்து அதன் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3 ஆம் கட்ட சோதனையை தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த மாதம் தடுப்பூசியின் 1 மற்றும் 2ஆம் கட்ட சோதனைகளின் இடைக்காலஆய்வை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், 26,000 தன்னாலவர்கள் மூன்றாம் கட்ட சோதனையில் பங்கேற்கவுள்ளனர்.