நிதியமைச்சர் அருண்ஜேட்லி கெஜ்ரிவாலின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார்…!
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டதை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அருண்ஜேட்லி டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த போது ஊழலில் ஈடுபட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து கெஜ்ரிவால் மீது அருண்ஜேட்லி இரண்டு அவதூறு வழக்குகளை தொடர்ந்திருந்தார். அரவிந்த் கெஜ்ரிவால் மீது 30க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் உள்ள நிலையில் அவர் வழக்குகளை திரும்பப் பெறச் செய்யும் வகையில் தொடர்புடையவர்களிடம் மன்னிப்பு கேட்டு வருகிறார். அந்த வகையில் அவர் நிதியமைச்சர் அருண்ஜேட்லியிடம் மன்னிப்பு கோரினார். அதனை ஏற்கவும், அவதூறு வழக்கை திரும்பப் பெறவும் அருண்ஜேட்லி ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.