சீனாவை முற்றுகையிட்ட சர்வதேச ஊடகங்கள்!காரணம் இதுதான் …!
சீனா கடலின் மேல் உலகின் மிக நீளமான பாலத்தை கட்டி முடித்துள்ளது. 55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து மூப்பதாயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மேம்பாலம், ஹாங்காங், மாக்காவ் உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், பயண நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பொருட் செலவில், பிரிட்டன், அமெரிக்கா உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்த பாலம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. அதேநேரத்தில், சர்வதேச ஊடகங்கள் இதனைப் பார்வையிட சீனா அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், வாகனங்கள் செல்வதற்கு ஏற்ப 6 விரிவான பாதைகள், 4 சுரங்கங்கள், 4 செயற்கைத் தீவுகள் ஆகியவற்றைக் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.