கண்ணை மறைக்கிற அளவுக்கா காதல்…. எனக்கும் வலிக்கும்!
கண்ணை மறைக்கும் அளவுக்கா இங்க காதல் இருக்கு என பாலாஜி கூறியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் இன்று காலை நடைபெற்றது. அப்போது காரணத்துடன் ஒவ்வொருவரும் இரண்டு பேரை தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், பாலாஜியை அவனுக்கு காதல் கண்ணை மறைக்கிறது எனக்கூறி ஆரி நாமினேட் செய்தார். இதனை இரண்டாவது புரோமோவிலேயே பிக்பாஸ் அனைவர் முன்னிலையிலும் கூறிவிட்டார். எனவே இங்கு நீங்க நினைக்கிற மாதிரி காதல் எல்லாம் இல்லப்பா, எனக்கு காதல் எல்லாம் வராது அப்படி வந்தா சொல்றேன் என்று ஷிவானியிடம் பாலாஜி கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்பொழுது ரியோ வீட்டில் உள்ளவர்களுடன் கூறுகையில், பாலாஜி தவறான வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசுகிறான். வீட்டில் உள்ளவர்களை அசிங்கமாக பேசும் பொழுது எப்படி இருக்கும் என கூற, பாலாஜி ஒருபுறம் ஷிவானி மற்றும் பிறரிடம் பேசுகிறார். கண்ணை மறைக்கும் அளவுக்கு இங்கு காதல் இருக்கிறதா?எனக்கும் வெளியில் வேலைகள் உள்ளது, காதலிப்பதற்காக எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் வரவில்லை என பாலாஜி கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram